என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » எலிசபெத் வாரன்
நீங்கள் தேடியது "எலிசபெத் வாரன்"
ஜனாதிபதி டிரம்ப் தனது பதவி காலத்தில் முழுமையாக பணியாற்ற மாட்டார். 2020 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக அவர் சிறைக்கு செல்வார் என செனட் சபை உறுப்பினர் எலிசபெத் வாரன் கூறியுள்ளார். #ElizabethWarren #Trump #PresidentialElection
வாஷிங்டன்:
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான களத்தில் மூத்த செனட் சபை உறுப்பினர் எலிசபெத் வாரன் உள்ளார். இதற்காக அவர் ஜனநாயக கட்சியினரிடையே பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று அயோவா மாகாணத்தில் ஜனநாயக கட்சியினரை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “ஜனாதிபதி டிரம்ப் தனது பதவி காலத்தில் முழுமையாக பணியாற்ற மாட்டார். 2020 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக அவர் சிறைக்கு செல்வார். இனவெறி மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தினந்தோறும் டுவிட்டரில் கருத்துகளை டிரம்ப் பதிவிடுகிறார். உண்மையில் அந்த கருத்துகள் மிகவும் மோசமானவை. மக்கள் அந்த டுவிட்டர் பதிவுகளை நம்பி ஏமாறக்கூடாது” என கூறினார். #ElizabethWarren #Trump #PresidentialElection
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான களத்தில் மூத்த செனட் சபை உறுப்பினர் எலிசபெத் வாரன் உள்ளார். இதற்காக அவர் ஜனநாயக கட்சியினரிடையே பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று அயோவா மாகாணத்தில் ஜனநாயக கட்சியினரை சந்தித்து பேசினார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பட்டியலில் செனட் சபை பெண் எம்.பி. எலிசபெத் வாரனும் போட்டியிட போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். #PresidentialElection #DemocratElizabethWarren
வாஷிங்டன்:
அடுத்த ஆண்டு நவம்பர் 3-ந் தேதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளர் ஆவதற்கு பலத்த போட்டி நிலவுகிறது. இந்திய வம்சாவளி பெண் எம்.பி. கமலா ஹாரிஸ் ஏற்கனவே தான் வேட்பாளர் போட்டியில் இருப்பதாக அறிவித்துள்ளார். இதே போன்று இந்திய வம்சாவளி இந்து எம்.பி. துளசி கப்பார்டும் வேட்பாளர் போட்டியில் களம் இறங்கி இருக்கிறார்.
மேலும் நியூஜெர்சி எம்.பி. கோரி புக்கர், நியூயார்க் எம்.பி. கிர்ஸ்டன் கில் பிராண்ட் ஆகியோரும் வேட்பாளர் போட்டியில் இறங்கி உள்ளனர்.
இந்தநிலையில் செனட் சபை பெண் எம்.பி. எலிசபெத் வாரனும் (வயது 69) வேட்பாளர் போட்டியில் தானும் இருப்பதாக மசாசூசெட்ஸ் மாகாணம், லாரன்சில் உள்ள தனது வீட்டில் வைத்து நேற்றுமுன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
அப்போது அவர், “வாஷிங்டனில் பணக்காரர்களிடம் இருந்தும், நல்ல தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டுள்ளவர்களிடமும் இருந்து அதிகாரத்தை எடுத்து, அவை யாருக்கு சேர வேண்டுமோ அவர்களின் கையில் ஒப்படைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது” என குறிப்பிட்டார். #PresidentialElection #DemocratElizabethWarren

2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் மிச்சேல் ஒபாமா, எலிசபெத் வாரன் ஆகிய பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் டிரம்ப் தோல்வி அடைவார் என்று கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. #USPresidentElection #Trump
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்று 2 ஆண்டுகள் விரைவில் முடிய இருக்கிறது.
அமெரிக்க அதிபரின் பதவி காலம் 4 ஆண்டுகள் ஆகும். இதனால் 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கிறது. அமெரிக்காவை பொறுத்த வரை அதிபர் தேர்தல் பணிகள் ஒரு ஆண்டு முன்பே தொடங்கிவிடும்.
அமெரிக்காவில் அதிபராக இருக்கும் ஒருவர் 2 முறை தேர்தலில் போட்டியிடலாம், அதன்படி குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் அடுத்த தேர்தலிலும் போட்டியிடுவார்.
ஜனநாயக கட்சியில் இருந்து டிரம்புக்கு எதிராக வேட்பாளர் நிறுத்தப்படுவார். அமெரிக்க அதிபர் தேர்தல் விதிகளின்படி ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்ய கட்சிக்குள்ளே தனித்தனியாக தேர்தல் நடைபெறும். உறுப்பினர்கள் ஓட்டுபோடுவார்கள். அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள்தான் வேட்பாளராக முடியும்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் மிச்சேல் ஒபாமா, எலிசபெத் வாரன் ஆகிய பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் டிரம்ப் தோல்வி அடைவார் என்று கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
47 சதவீத பேர் அவருக்கு எதிராக மனநிலையில் உள்ளனர்.
ஆக்சியோஸ் கருத்து கணிப்பில் ஹிலாரி கிளிண்டன் 6 புள்ளிகள் வித்தியாசத்தில் குடியரசு கட்சி வேட்பாளரையும், மிச்சேல் ஒபாமா 16 புள்ளிகள் வித்தியாசத்தில் குடியரசு கட்சி வேட்பாளரையும் தோற்கடிப்பார் என்று தெரிவித்துள்ளது.
நியூயார்க் செனட்டர் கிறிஸ்டியன் கில்பிரான்ட் 8 புள்ளிகள் வித்தியாசத்தில் டிரம்பை தோற்கடிப்பார் என்றும் அந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டது. #USPresidentElection #Trump
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்று 2 ஆண்டுகள் விரைவில் முடிய இருக்கிறது.
அமெரிக்க அதிபரின் பதவி காலம் 4 ஆண்டுகள் ஆகும். இதனால் 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கிறது. அமெரிக்காவை பொறுத்த வரை அதிபர் தேர்தல் பணிகள் ஒரு ஆண்டு முன்பே தொடங்கிவிடும்.
அமெரிக்காவில் அதிபராக இருக்கும் ஒருவர் 2 முறை தேர்தலில் போட்டியிடலாம், அதன்படி குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் அடுத்த தேர்தலிலும் போட்டியிடுவார்.
ஜனநாயக கட்சியில் இருந்து டிரம்புக்கு எதிராக வேட்பாளர் நிறுத்தப்படுவார். அமெரிக்க அதிபர் தேர்தல் விதிகளின்படி ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்ய கட்சிக்குள்ளே தனித்தனியாக தேர்தல் நடைபெறும். உறுப்பினர்கள் ஓட்டுபோடுவார்கள். அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள்தான் வேட்பாளராக முடியும்.
ஜனநாயக கட்சி சார்பில் 25-க்கும் மேற்பட்டவர்கள் தயாராகி வருகிறார்கள். சென்னை பெண் உள்ளிட்ட 2 இந்தியர்களும் இதற்கான போட்டியில் உள்ளனர்.
47 சதவீத பேர் அவருக்கு எதிராக மனநிலையில் உள்ளனர்.
ஆக்சியோஸ் கருத்து கணிப்பில் ஹிலாரி கிளிண்டன் 6 புள்ளிகள் வித்தியாசத்தில் குடியரசு கட்சி வேட்பாளரையும், மிச்சேல் ஒபாமா 16 புள்ளிகள் வித்தியாசத்தில் குடியரசு கட்சி வேட்பாளரையும் தோற்கடிப்பார் என்று தெரிவித்துள்ளது.
நியூயார்க் செனட்டர் கிறிஸ்டியன் கில்பிரான்ட் 8 புள்ளிகள் வித்தியாசத்தில் டிரம்பை தோற்கடிப்பார் என்றும் அந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டது. #USPresidentElection #Trump
×

X